ராணிப்பேட்டை மாவட்டம் அம்மனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர். இவருக்கு 45 வயது ஆகிறது. இவர் பைனான்ஸ் கம்பெனி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அஸ்வினி அதே பகுதியில் திமுக ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். சுதாகரின் பைனான்ஸ் கம்பெனியில் அவினேஷ் (21) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார்.

சுதாகர் தனது நண்பர்களுடன் இணைந்து பைனான்ஸ் அலுவலகத்தில் மது குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி சுதாகர் நண்பர்களுடன் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தபோது சுதாகர் அவினேஷின் தாய் குறித்து தரகுறைவாக பேசியுள்ளார்.

இதனால் கோபமடைந்த அவினேஷ் சுதாகரை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த சுதாகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவினேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவினேஷ் ரத்தினகிரி காவல் நிலையத்தில் கையெழுத்துட்டு வந்தார். இது அறிந்த சுதாகர் அவினேஷை பழிவாங்க நினைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து சுதாகரை கொலை செய்ய முயன்றார்.

அவர் தப்பித்து ஓட முயன்றும் அவர்கள் அவினேசை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுதாகர் உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.