சேலம் மாவட்டம் கருமலைகூடல் பகுதியை சேர்ந்தவர் சித்திக். இவரது மகன் முஹம்மது மன்சூர் .19 வயதான முகமது மன்சூர் சூரமங்கலம் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 8-ஆம் தேதி மதியம் கல்லூரியில் இருந்து வெளியே வந்த முகமது மன்சூரை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கடத்தி சென்றனர்.

இதனையடுத்து சேலம் இரும்பாலை பகுதியில் கஞ்சமலை அடிவாரம் காட்டு பகுதியில் முகமது மன்சூரை நிர்வாணப்படுத்தி மூன்று பேரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அதனை வீடியோ எடுத்து முகமது மன்சூரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் படுகாயமடைந்த மன்சூர் மெதுவாக நடந்து வீட்டிற்கு வந்து தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

அவரை மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மணியனூரைச் சேர்ந்த ஷாஜகான் மற்றும் இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.