புதுடில்லி: தெரு நாய் கடி சம்பவங்களை தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் சுற்றித்திரியும் அனைத்து தெரு நாய்களையும் எட்டு வாரங்களுக்குள் பிடித்து நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட இந்த உத்தரவு, தெரு நாய் தாக்குதல்களால் அதிகரித்து வரும் அச்சத்தை தடுக்க முக்கிய நடவடிக்கையாகும்.
