பீகார் சட்டசபை தேர்தலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை அடுத்து இதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களை நீக்கியதற்கான காரணத்தை கூற முடியாது எனவும் 65 லட்சம் பேரின் விவரங்களை வெளியிட முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தது.
இதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் கர்நாடகாவிலும் இதே போன்று வாக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறினார். இந்நிலையில் இன்று டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் 25 கட்சிகளை சேர்ந்த 300 எம்பிக்கள் வாக்கு முறை கேட்டை கண்டித்து பேரணியாக சென்றனர். தடுப்புகளை மீறி எம்பிக்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்.
இதைத்தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எம்பி கனிமொழி, பிரியங்கா காந்தி உட்பட இந்தியா கூட்டணி எம்பிகள் அனைவரும் கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைதுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி இந்த போராட்டம் அரசியல் சார்ந்தது அல்ல அரசியலமைப்பை காப்பதற்கானது.
இந்தப் போராட்டம் ஒரு மனிதனின் ஒரு வாக்குக்கானது. மேலும் எங்களுக்கு தேவை தூய்மையான வாக்காளர் பட்டியல் என்று ஆவேசமாக கூறினார்.
