தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்ட தவறியதால் அபராத வட்டியுடன் சேர்த்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபராத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இது கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் 31 க்கு முன்னர் தவணைக்கால முடிவடைந்த வீட்டு வசதி வாரிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையாமல் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியை ஆண்டுக்கு 5 மாதங்களுக்கு கணக்கிட்டு தள்ளுபடி செய்தோம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இனங்களில் விரிவாக விற்பனை பத்திரம் பெற வட்டி தள்ளுபடி சலுகை ஆனது வரும் 2026 ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது என்று வீட்டு வசதி வாரியம் அரசாணை வெளியிட்டுள்ளது.
