சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ நெட்டிசன்களிடையே  சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமில் உள்ள ஒரு  கடையில், இரண்டு பெண்கள் தரையில் படுத்திருந்தனர். ஒருவர்  மொபைலில் மூழ்கியிருந்தார், மற்றொருவர் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் பேண்ட்டுக்குள் திடீரென ஒரு எலி நுழைந்தது.

எலி உள்ளே நுழைந்தவுடன், அந்தப் பெண் பீதியில் திடீரென எழுந்து கடை முழுவதும் குதிக்க ஆரம்பித்தார். அருகில் இருந்த தோழி, அந்தக் காட்சியைப் பார்த்தவுடன் சிரிப்பை அடக்க முடியாமல் சத்தமாகச் சிரித்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Ngakaksehat (@ngakaksehat)

சில வினாடிகள் கழித்து, எலி தானாகவே பேண்ட்டிலிருந்து வெளியே வந்து மறுபுறம் ஓடியது. இந்தக் காட்சி அங்கு இருந்தவர்களையும், இணையத்தில் பார்த்தவர்களையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோவை @ngakaksehat என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. இதுவரை 2 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரும்பியுள்ள இந்த வீடியோவுக்கு பல நகைச்சுவை கருத்துகள் குவிந்துள்ளன. “எலி உள்ளே நுழைந்தவுடன், அந்தப் பெண்  நடனமாடத் தொடங்கிவிட்டார்” என ஒருவர் கிண்டல் செய்தார்.