குஜராத் ஜூனகத் மாவட்டம் பில்கா சாலையில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆகஸ்ட் 5 அன்று, பரபரப்பாக இயங்கும் சாலையில் திடீரென சாலையோரத்தில் சிங்கம் நிற்பதை வழிப்போக்கர்கள் கண்டனர்.
சிலர் வாகனங்களை நிறுத்தி பயந்து நிற்க, சிலர் வாகனத்தில் இருந்து இறங்கி வீடியோ எடுக்கத் தொடங்கினர். 17 விநாடிகள் கொண்ட இந்த வீடியோவில், சிங்கம் அமைதியாக நின்று மக்களை நோக்கி பார்க்கும் காட்சி தெளிவாக தெரிகிறது.
जूनागढ़ में सड़क पर अचानक शेर आ रिक्शा समेत कई व्हीकल वाले रुक गए pic.twitter.com/4GKSuyv6YE
— mahendraprasad (@mprsd5) August 6, 2025
அந்த சமயம், கையில் குச்சியுடன் இருந்த ஒரு நபர் திடீரென சிங்கத்தை நோக்கி சென்று சத்தமிட்டார். இதனால், சிங்கம் பயந்து காட்டுப் பகுதிக்குத் திரும்பியது. சிங்கம் யாரையும் தாக்கவில்லை.
இந்த பகுதி கிர் தேசிய பூங்காவுக்கு அருகில் இருப்பதால், சாலையோரத்தில் சிங்கங்கள் காணப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறும் என்று அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த வீடியோவை @mprsd5x என்ற எக்ஸ் (ட்விட்டர்) பயனர் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
ஒருவரின் கூற்றுப்படி, “கைத்தடியுடன் சென்ற அந்த நபரின் தன்னம்பிக்கை பாராட்டத்தக்கது, அவர் சிங்கத்தை ஒரு நாய் போல விரட்டினார்” என்றும், மற்றொருவர் “சிங்கம், நான் இங்கே எப்படி வந்தேன் என்று யோசித்துக் கொண்டிருக்க வேண்டும்” என்றும் நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
