அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சிறுமி கண்களை மூடி, முழு கவனத்துடன் இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலை இனிமையாகப் பாடுகிறார்.

பாடும் போதே முகத்தில் தெரிந்த பெருமையும், தேசபக்தி உணர்வும், காண்போரின் இதயங்களை உருக்கியுள்ளது. இதனால், வீடியோ வெளியாகிய சில நேரங்களில் ஆயிரக்கணக்கானோர் பார்த்து பகிர்ந்ததால் அது வைரலானது.

இந்த வீடியோவை அருணாச்சலத்தின் ரோயிங் தொகுதி எம்.எல்.ஏ மச்சு மிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “அருணாச்சலத்தைச் சேர்ந்த ஒரு சிறிய குரல், ஒரு பெரிய தேசத்தின் தேசிய கீதத்தை பாடுகிறது” என்று தலைப்பிட்ட அவர், சிறுமியின் அர்ப்பணிப்பை  பாராட்டியுள்ளார்.

இப்படியான காட்சிகள், பிராந்திய அடையாளத்தை வலுப்படுத்துவதோடு, இந்தியாவின் ஒற்றுமை, பெருமை மற்றும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதாகவும் பாராட்டப்படுகிறது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இது என் நாளையே மாற்றிவிட்டது, மிகவும் அழகான காட்சி” எனவும், “இந்த குட்டி தேவதை எதிர்காலத்தில் அதிகமான தேசபக்தியுடன் வளருவாள்” எனவும் பாராட்டியுள்ளனர். “ஜெய் ஹிந்த்! கடவுள் உனக்கு நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் தரட்டும்” எனும் வாழ்த்துகளும் பரவலாக பதிவாகி வருகின்றன.