இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. தொடரின் கடைசி நாளில் வெறும் 37 ரன்கள் எடுத்தால் போதும் என இங்கிலாந்து அணிக்கு சாதகமான நிலை இருந்தபோதிலும், இந்திய பந்து வீச்சாளர்கள் அதிரடி விளையாடினர். சிராஜும், பிரசித் கிருஷ்ணாவும் இணைந்து 4 விக்கெட்டுகளை வெகு விரைவில் வீழ்த்தியதன் மூலம் இந்தியா டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2–2 என சமனாக முடிவடைந்தது. கடைசி நாளில் நடந்து முடிந்த இந்த பரபரப்பான போட்டி, ரசிகர்களுக்கு மிகுந்த சுவாரஸ்யத்தையும் திரிலையும் கொடுத்தது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்களின் துல்லிய முயற்சி மற்றும் அணியின் நம்பிக்கையுடைய அணுகுமுறை வெற்றிக்கு காரணமாக அமைந்தது.