பருவமழை காலம் தொடங்கிய நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் இன்று காலை காற்றழுத்த தாழ்வாக உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, வங்கக் கடலில் வடக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதாகவும், அவை அடுத்த 24 மணி நேரத்தில் வங்கதேச கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 5,30 மணி அளவில் உருவான காற்றழுத்த தாழ்வு வங்கதேசத்தின் தெற்கே 130 கிலோ மீட்டர் தொலைவிலும், கொல்கத்தாவின் தென்கிழக்கு 170 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வங்கம் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா மற்றும் ஜார்கன்ட் வழியாக மேற்கு- வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மேகமூட்டத்துடன் காணப்படும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.