தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 6 பேரின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் காலியாகும் இடங்களுக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அதில் அதிமுக, திமுக முன்னுறுத்திய ஆறு வேட்பாளர்களும் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.

இதில் திமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக அவர் இன்று பதிவு ஏற்றுக்கொண்டார். அவர் மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்.