எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தகுதியான மாணவ மாணவிகளின் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போலவே நடப்பான் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில் தகுதியான மாணவர்களின் தரவரிசை பட்டியல் இன்று கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். இதை அடுத்து மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு வருகிற ஜூலை 30ஆம் தேதி தொடங்க உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லையைச் சேர்ந்த சூரிய நாராயணன் என்ற மாணவர் முதலிடத்தை பிடித்துள்ளார்.