சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை மாசிலாமணி தெருவை சேர்ந்தவர் ஆதித்யா சச்சின். இவர் தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களாகவே சச்சின் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஜூலை 23ஆம் தேதி வழக்கம் போல கல்லூரி முடிந்ததும் வீடு திரும்பிய சச்சின் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 7 ஆவது மாடியில் தியானம் செய்யப் போவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஆனால் அங்கிருந்து திடீரென கீழே குதித்துள்ளார். அதில் பலத்த காயமடைந்த சச்சின் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ராயப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த சச்சின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அந்த குடியிருப்பில் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
