சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நயினார் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(35). இவரது மனைவி ரேவதி(32). இந்த தம்பதியினருக்கு ஜனனி(11), வருண் பகவான்(9), வெற்றிவேல்(7) என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். சம்பவம் நடந்த அன்று கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பிறகு ஆறுமுகமும் ரேவதியும் வெவ்வேறு அறைகளின் தூக்கில் தூங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
