இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது அந்த வீடியோவில் பெண் ஒருவர் தனது காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு காரில் இருந்து ஏதோ ஒன்றை எடுக்க முயற்சி செய்தார். அப்போது கார் திடீரென பின்னோக்கி சென்றது. இதை அடுத்து அவர் காரை நிறுத்த முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை. இந்த கார் நடுரோட்டை நோக்கி சென்றது. அப்போது சாலையில் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருந்தன.

 

இதையடுத்து அந்தப் பெண் தனது கைகளை அசைத்தவாறு வாகனத்தை நிறுத்த முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை. இதையடுத்து நடுரோட்டிற்கு சென்ற கார் ஒரு வழியாக நின்றது. அதன் பின் அந்தப் பெண் காரில் ஏறி மீண்டும் சாலையின் ஓரத்தில் எடுத்துச் சென்று வந்து விட்டார். இது தொடர்பான வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.