சீனாவில் மெய்(16) என்ற சிறுமி வசித்து வருகிறார். இவர் தனது பிறந்தநாள் உடைக்கு ஏற்றவாறு உடல் எடையை குறைக்க விரும்பியுள்ளார். இதன் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக வெறும் காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டுள்ளார். இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது, தற்போது அவரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது. ரத்தத்தில் பொட்டாசியம் அளவு குறைந்ததே இதற்கு காரணம் என்று மருத்துவர்கள்  கூறியுள்ளனர். மேலும் முறையான ஆலோசனைகளை பெற்று டயட்டை பின்பற்றுமாறு அறிவுரை வழங்கியுள்ளனர்.