“தென் கொரியாவில் நிலைதடுமாறி பின்னோக்கித் தரையில் விழுந்த முதியவர் ஒருவரின் தலை தரையில் மோதி விபரீதம் ஏற்படுவதைத் தடுக்க, மின்னல் வேகத்தில் தனது காலை இடையில் கொடுத்துக் காப்பாற்றிய வாலிபரின் அசாத்திய சாதுரியமான வீடியோ காட்சி!” தற்போது சர்வதேச அளவில் சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த உலகையே மிரள வைத்துள்ளது.

அந்தப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் எதிர்பாராத விதமாகச் சமநிலை இழந்து மல்லாக்க விழுந்த போது, அங்கிருந்த வாலிபர் நொடிக் பொழுது கூடத் தாமதிக்காமல் அசுரவேகத்தில் சிந்தித்து, தனது காலை முதியவரின் தலைக்கு அடியில் கொடுத்துத் தடுத்துள்ளார்.

ஒரு மில்லி செகண்ட் தாமதித்திருந்தாலும் முதியவரின் உயிருக்கே ஆபத்தாய் முடிந்திருக்க வேண்டிய இந்த விபத்தை, தனது அசாத்திய துணிச்சலால் தடுத்து நிறுத்திய அந்த வாலிபரை ஒட்டுமொத்த உலக நாடுகளும் “ரியல் ஹீரோ” என்று கொண்டாடி வருகின்றன.

“>

 

இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், “மனுஷ நேயம் இன்னும் உயிரோடு தான் இருக்கிறது என்பதற்கு இந்த இந்திய வாலிபரின் மனிதாபிமானமே சாட்சி” என்று தங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைக் கமெண்ட்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.