சீனாவின் பல பகுதிகளில் தற்போது கடுமையான வெப்ப அலை தொடர்ந்து தாக்கி வருகிறது. வெப்பநிலை 40°C-ஐ தாண்டும் என்று முன்னறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் இந்த வெப்பம் கடும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஹெபெய் மாகாணத்தில் உள்ள ஒரு பூங்காவில், வெப்பத்தில் தவிக்கும் ஒரு சிம்பாஞ்சி (chimpanzee), தனது உடலை குளிர்விப்பதற்காக கர்ட்போர்டு துண்டை விசிறியாக அதாவது தனக்குத்தானே ஒரு அட்டையால் காற்று வீசும் காட்சி தற்போது இணையத்தில் பரவலாக வைரலாகியுள்ளது.

இந்த வீடியோ ஜூலை 12ஆம் தேதி @mustsharenews என்ற சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அந்த குரங்கு தற்போது 19 வயதுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூங்காவுக்கு வந்த ஒரு பார்வையாளர் சொல்வதன்படி, அந்த குரங்கு, தன் முன் நின்ற பூங்கா ஊழியர் ஒருவர் கை விசிறி மூலம்  காற்று வீசுவதை கவனித்து, அதே போன்று “மனிதர்களைப் போல” நடந்து கொண்டு அந்த விசிறியை  தனக்குத்தானே வீசி உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by MS News (@mustsharenews)

“>

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரிடம் சிரிப்பையும் சிந்தனையையும் ஏற்படுத்தியுள்ளது. பலர், பூங்கா விலங்குகளுக்கு சாயல் கொடுக்கும் மரங்கள், குளிரூட்டும்  நிழலான இடங்கள் ஆகியவை கட்டாயமாக ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் இந்த வீடியோவுக்கு பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.