சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் நம்மை வியப்படையச் செய்யும் பல்வேறு வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
மேலும் பொதுவாக ஆடு, மாடு போன்ற கால்நடைகளை ஏற்றிச் செல்ல பெரிய லாரிகள் அல்லது மினி வேன்கள் பயன்படுத்தப்படும். ஆனால், இந்த வீடியோவில் ஒரு நபர், யாரும் எதிர்பாராத விதமாக ஒரு பெரிய எருமை மாட்டை தனது சிறிய இ-ரிக்ஷா வாகனத்தின் பின்புறம் ஏற்றி, அசால்ட்டாக சாலையில் ஓட்டிச் செல்கிறார்.
अब बस किसी दिन ये ट्रक लाद कर
एजेंसी में पहुंचा दे।तो इस वाहन के बनाने का लक्ष्य पूरा हो जाएगा। pic.twitter.com/3jTak516bw
— Rv yadav (@ravyadav5692) June 21, 2026
“>
இந்த விந்தையான காட்சியை இ-ரிக்ஷாவிற்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து, ‘X’ சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் தங்களின் வியப்பை அடக்க முடியாமல் பல்வேறு நகைச்சுவையான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிலர் இதனை “நம்ம ஊரு டிரான்ஸ்போர்ட் சிஸ்டம்” என்றும், இன்னும் சிலர் “இந்த இ-ரிக்ஷா செய்த வேலையால், மினி வேன்களின் கேரியரே காலி ஆகிவிட்டது” என்றும் வேடிக்கையாகக் கமெண்ட் செய்து இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
