ஆழ்கடலில் தொழில் செய்யும் மீனவர்களின் வாழ்க்கை எப்போதும் ஆபத்துகளும் ஆச்சரியங்களும் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. கடலுக்குள் சென்று மீன்பிடிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அவர்கள் எந்த மாதிரியான விசித்திரமான கடல் வாழ் உயிரினங்களைச் சந்திக்க நேரிடும் என்பதை யாராலும் கணிக்க முடிவதில்லை.

அந்த வகையில், கடலுக்கு நடுவே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் முகத்தில், பிரம்மாண்டமான ஆக்டோபஸ்  ஒன்று தனது 8 கரங்களாலும் கெட்டியாகக் கட்டியணைத்துக் கொண்டு ஒட்டிக் கொண்ட திடுக்கிடும் சம்பவம், இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த உலகையும் உரைய வைத்துள்ளது.

கடலின் அடியில் இருந்து எதிர்பாராத விதமாக வெளிப்பட்ட அந்த ஆக்டோபஸ், மீனவரின் முகத்தை நோக்கிப் பாய்ந்து, தன்னுடைய வலுவான மற்றும் பிசுபிசுப்பான 8 கரங்களாலும் அவரது முகத்தை முழுமையாக மூடிப் பிடித்துக்கொண்டது. முகத்தில் ஒட்டிக்கொண்ட ஆக்டோபஸின் பிடியில் இருந்து விடுபட முடியாமல், மூச்சுத் திணறியபடி அந்த மீனவர் போராடிய காட்சிகள் காண்போரைச் சிலிர்க்க வைத்தன.

ஆக்டோபஸின் கரங்களில் இருக்கும் வலுவான உறிஞ்சும் தன்மையுடைய உறுப்புகள் மீனவரின் தோலோடு இறுக்கமாக ஒட்டிக்கொண்டதால், அதைத் தனது கைகளால் இழுத்துப் பிரிக்க முடியாமல் அவர் பல நிமிடங்கள் தவித்துப் போனார்.

அந்த ஆபத்தான தருணத்திலும் மன உறுதியை இழக்காமல், சக மீனவர்களின் உதவியோடு கடுமையான போராட்டத்திற்குப் பிறகே அந்த ஆக்டோபஸை முகத்தில் இருந்து வெற்றிகரமாகக் கழற்றி எறிய முடிந்தது. கடலின் ஆபத்தான பக்கத்தையும், அதே வேளையில் அங்கே நடக்கும் அரிய நிகழ்வுகளையும் உலகிற்கு உணர்த்தும் இந்த அதிரடி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவி வருகிறது.

இந்நிலையில் ஏலியன் படத்தில் வருவதைப் போல அச்சு அசலாக இருக்கிறது” என்று நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவைப் பார்த்து வியப்பையும் அதிர்ச்சியையும் பதிவு செய்து வருகின்றனர்.

“>