தமிழக முதலமைச்சரும், முன்னணி நடிகருமான விஜய் இன்று (ஜூன் 22) தனது 52-வது பிறந்தநாளைக் கொண்டாடுவதை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் அவரது ரசிகர்களும் தவெக கட்சித் தொண்டர்களும் கோலாகலமாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் வேளையில், விஜய்யின் தாய் ஷோபா தனியார் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியும், அவரது விவாகரத்து வழக்கு குறித்த லேட்டஸ்ட் தகவலும் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.

இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்ட ‘வாகை தலைவனுக்கு வாழ்த்துகள்’ என்ற பாராட்டு நிகழ்ச்சி ஒருபுறம் நடந்தாலும், விஜய் தனது மனைவி சங்கீதாவோடு இணைந்து இந்த பிறந்தநாளைக் கொண்டாடவில்லையே என்ற சின்ன வருத்தம் ரசிகர்களிடம் இருந்து வருகிறது.

இந்நிலையில், விஜய்யின் தாய் ஷோபா அளித்த பேட்டியில், “விஜய்க்கு எப்போதுமே தனிமைதான் பிடிக்கும்; வெளிநாட்டிற்குச் சென்றால் கூட குடும்பத்தினரை ஷாப்பிங்கிற்கு அனுப்பிவிட்டு இவர் ரூமிலேயே தனியாகத்தான் இருப்பார், மாறுவேடத்தில் வெளியே போனாலும் மக்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால் சைலெண்டாகவே இருந்துவிடுவார்” எனத் தளபதியின் ரகசியப் பக்கத்தைப் பகிர்ந்துள்ளார்.

இதற்கிடையே, விஜய் மற்றும் சங்கீதா இடையேயான விவாகரத்து மனு அண்மையில் நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, இருவரும் ஆன்லைனில் ஆஜராகக் கோரிக்கை வைத்ததை அடுத்து, அதற்குரிய மின்னஞ்சல் மற்றும் ஆவணங்களைச் சரியாகச் சமர்ப்பிக்கக் கூறி நீதிமன்றம் இந்த வழக்கை வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

‘விஜய்யும் சங்கீதாவும் சமாதானமாகப் போக முடிவெடுத்துள்ளனர்’ என்ற தகவல்களும் சில நாட்களுக்கு முன்பு கசிந்ததால், ஆகஸ்ட் 7 அன்று இவர்களுக்குச் சட்டப்பூர்வ விவாகரத்து கிடைக்குமா அல்லது இருவரும் சேர்ந்து வாழப்போவதாக அறிவிப்பார்களா என்ற பலத்த எதிர்பார்ப்பும் விவாதமும் தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.