கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தந்தைக்கு அவரது 14 ஆண்டுகள் கனவை நிறைவேற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பல வருடங்களாக சொந்தமாக ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்க வேண்டும் என கனவு கண்ட தந்தைக்கு ராயல் என்ஃபீல்டு பைக்கை பரிசாக அளித்த மகன்.

 

View this post on Instagram

 

A post shared by Ash (@ashwin.os)

அந்த பரிசை வாங்கிய சில நொடிகள் உறைந்து நின்ற தந்தையின் உணர்ச்சிகளை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். 14 வருடங்களுக்கு முன்பு அவர் விரும்பிய பொருளை பணம் இருந்தும் ஒருபோதும் செய்யாமல் இருந்துள்ளார்.

அதனை கவனித்த அவரது மகன் அவருக்கு அந்த பைக்கை பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது இதயத்தையும் தொட்டுள்ளது. மேலும் தந்தை, மகனுக்குமான நெகிழ வைக்கும் தருணங்களை வெளிப்படுத்தியதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.