மொஹாலி மாவட்டம் டெராபாசி பகுதியில், கல்லூரி முடிந்து காரில் வீடு திரும்பிய 20 வயது மாணவன் மீது ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பராக்பூர் பகுதியைச் சேர்ந்த பூபிந்தர் சிங்கின் மகனும், அரசுக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கலைப் பிரிவு மாணவருமான தரன்ப்ரீத் சிங், கல்லூரி முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஐசாபூர் சாலை ரயில்வே லெவல் கிராசிங் அருகே வந்தபோது, பின்னால் எண் இல்லாத தார் ரக எஸ்.யூ.வி கார் ஒன்று இவரது வழியை மறித்துள்ளது.
அதிலிருந்து இறங்கிய சில இளைஞர்கள், திடீரென தரன்ப்ரீத் சிங் மீது கூர்மையான ஆயுதங்கள் மற்றும் கட்டைகளால் கொடூரத் தாக்குதல் நடத்தினர். மேலும், அவர் வந்த காரையும் அடித்து நொறுக்கிவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பியோடினர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு டெராபாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சண்டிகர் ஜி.எம்.சி.எச் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.
சிகிச்சை பெற்று வரும் போது தரன்ப்ரீத் சிங் அளித்த புகாரின் அடிப்படையில், தங்களது கல்லூசியைச் சேர்ந்த ‘குர்லி’ மற்றும் ‘குறி’ ஆகிய இரண்டு மாணவர்களும், சில அடையாளம் தெரியாத நபர்களும் சேர்ந்து இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
A 20-year-old college student was seriously injured after a group of youths allegedly attacked him with sharp-edged weapons and sticks in Derabassi, Mohali. His car was also badly damaged during the incident.
The victim, identified as Taranpreet Singh, son of Bhupinder Singh of… pic.twitter.com/TUatdZBjKx
— Hate Detector 🔍 (@HateDetectors) August 21, 2026
“>
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
