பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற மற்றும் பணியில் இருக்கும்போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இடைக்கால மாத ஊதியத்தின் அகவிலைப்படியை (DA) 60 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உத்தரவிட்டுள்ளது.
6-வது ஊதியக்குழு விகிதத்தில் கடைசியாக ஊதியம் பெற்ற ஊழியர்களுக்கு, வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் அகவிலைப்படி (DAT) 262 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில்தான், பயனாளிகள் அனைவருக்கும் ஒரே சீராகப் பயன்பெறும் வகையில் இடைக்கால மாத ஊதியத்தின் அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தப்பட்டு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பால் CPS திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் பெரும் பயனடைவார்கள் என்பதுடன், அவர்களின் மாதாந்திர ஊதியத் தொகையும் கணிசமாக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
