கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவன் மதியழகன், எந்தவித முறைப்படியான நடனப் பயிற்சியும் பெறாமல் பரதநாட்டியம் ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். எந்தவித வெளிப்புறப் பயிற்சியும் இன்றி, தனது இயற்கையான ஈடுபாட்டின் மூலம் மாணவர் மேடையில் வெளிப்படுத்திய நடனத் திறமை காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

கிராமப்புற அரசுப் பள்ளியில் பயிலும் இந்த மாணவனின் அசாத்தியத் திறமையை அறிந்த ஆசிரியர்கள், பள்ளித் தோழர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என பலரும் அவருக்குத் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

“>

 

சாதாரணப் பின்னணியில் இருந்து வரும் மாணவ-மாணவிகளிடம் இதுபோன்று மறைந்திருக்கும் கலைத் திறமைகளை முறையாக அடையாளம் கண்டு ஊக்கப்படுத்துவது, அவர்களின் எதிர்காலத்தை வளமாக்குவதோடு மட்டுமின்றி, பல சாதனைகளைப் படைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.