கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பின் போது, குடிநீர் மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சென்னை மேயர் பிரியா ராஜன் அவர்களின் வீட்டை முற்றுகையிட்ட சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போதைய அரசியல் சூழலில், ஆளுங்கட்சிக்கு எதிராகப் பொதுமக்கள் போராடியதாகக் கூறப்படும் அந்த பழைய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் பகிரப்பட்டு விவாதப் பொருளாகியுள்ளது.

“>

 

குறிப்பிட்ட அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உண்மையான பாதிக்கப்பட்ட மக்களா அல்லது அரசியல் நோக்கத்துடன் திரட்டப்பட்டவர்களா என்பது குறித்தும், தற்போது பரவி வரும் இந்த பழைய காணொளி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் இணையத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகின்றன.