மனிதர்களுக்கும் அவர்களின் செல்லப்பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்கும் இடையிலான பிணைப்பு எப்போதும் மிகவும் சிறப்பானது. இருப்பினும், அவை எழுப்பும் குறைக்கின்ற அல்லது கத்துகின்ற ஒலிகளின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில் செல்லப்பிராணி பிரியர்களுக்கு நீண்டகாலமாக ஒரு சவால் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
இந்த சிரமத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணையுடன் செல்லப்பிராணிகளின் பாஷையைப் புரிந்து கொள்ள உதவும் புதிய ஏஐ சாதனமான ‘பெட்டிசேட்’ சந்தையில் அறிமுகமாகி மிகப்பெரிய கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்த அதிநவீன ஏஐ சாதனம், செல்லப்பிராணிகள் எழுப்பும் ஒவ்வொரு விதமான ஒலிகளையும் அவற்றின் உடல் மொழியையும் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்யும் திறனைக் கொண்டுள்ளது. நாய் குறைக்கும் போதோ அல்லது பூனை கத்தும் போதோ, அவை எந்த உணர்வில் இருக்கின்றன, பசியில் இருக்கின்றனவா, பயப்படுகின்றனவா அல்லது விளையாட அழைக்கின்றனவா என்பதை இந்தச் சாதனம் மனிதர்கள் புரியும் மொழியில் உடனடியாக மொழிபெயர்த்து அளிக்கிறது.
மேலும் செல்லப்பிராணிகளின் குரல் அலைவரிசைகளைக் கண்டறிந்து, அதன் மூலம் அவற்றின் மனநிலையைத் தெளிவாக விவரிப்பது இதன் சிறப்பு அம்சமாகும். தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமாகப் பார்க்கப்படும் இந்த சாதனம், வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இனி உங்கள் செல்லப் பிராணி என்ன சொல்ல வருகிறது என்பதை ஊகிக்க வேண்டிய அவசியமில்லை, இந்த சிறிய ஏஐ கருவி மூலம் அவற்றின் எண்ணங்களை மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள தகவல்தொடர்பு இடைவெளியைக் குறைத்து, பாசப் பிணைப்பை மேலும் வலுப்படுத்த இந்த புதிய ஏஐ சாதனம் ஒரு மிகச்சிறந்த பாலமாக உருவெடுத்துள்ளது.
See this Instagram video by @beebomco https://t.co/uCl03nZp9j
“>
