அறநிலையத்துறையின் உள்கட்டமைப்பு மற்றும் அமைச்சரவை நடவடிக்கைகள் குறித்த ரகசியத் தகவல்கள் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுக்கு முன்கூட்டியே எப்படித் தெரியவருகிறது என்ற கேள்வி அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, சம்பந்தப்பட்ட அமைச்சர் வெளியிடும் அறிவிப்புகள் குறித்த எண்ணிக்கையை முன்கூட்டியே குறிப்பிட்டார்.

மேலும், கோயில்களில் மேற்கொள்ளப்படும் அதிரடி ஆய்வுகளுக்குப் பிறகு “எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை” என்றும் அவரே அடித்துக் கூறி வருகிறார். ஆட்சியில் இல்லாத ஒருவருக்கு அமைச்சரவையின் உள்கட்டமைப்பு ரகசியங்களும், துறை சார்ந்த உள் விவகாரங்களும் எந்த வகையில் எட்டிப் பார்க்கின்றன என்ற நியாயமான சந்தேகம் தற்போது வலுத்து வருகிறது.

இந்தத் தொடர்ச்சான சம்பவங்கள், அறநிலையத்துறைக்குள்ளேயே இருந்து யாரோ சில அதிகாரிகள் அல்லது நபர்கள் ரகசியத் தகவல்களைத் தொடர்ந்து கசியவிட்டு வருகின்றனர் என்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

“>

 

எனவே, இதுபோன்ற தொடரும் தகவல் கசிவுகள் மற்றும் முறைகேடுகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு, அறநிலையத்துறையில் முழுமையான மற்றும் தீவிரமான நிர்வாகச் சீரமைப்பு செய்யப்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும்.