கொல்லத்தைச் சேர்ந்த விபஞ்சிகா மீது கணவன் நிதிஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஏற்பட்ட கொடுமைகள் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவையே உலுக்கி வருகிறது.
விபஞ்சிகா, கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். இவர், ஷார்ஜாவில் வேலை பார்த்து வந்த நிதிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்தார். திருமணத்திற்குப் பிறகு, கணவருடன் ஷார்ஜாவில் குடியிருந்த இவர், தொடர்ச்சியாக வரதட்சணை துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில், கடந்த வாரம், தன்னுடைய பெண் குழந்தையைக் கொன்று, பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பாக, மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன், “நிதிஷ் தொடங்கி, அவரது குடும்பத்தினர் விபஞ்சிகாவை மனதளவில் நசுக்கி விட்டனர். பசிக்கே சாப்பாடு தராமல், உடல் முழுவதும் காயங்களை ஏற்படுத்தும் அளவுக்கு தாக்கியுள்ளனர். நகையை வாங்கி வா என சொல்வதிலிருந்து, நிர்வாணமாக வீடு முழுக்க செல்ல வைத்தல், அழகு காரணமாக தலைமுடியை முற்றிலும் மொட்டையடித்தல் வரை கொடுமைகள் நடந்துள்ளன.
இதற்கு பிறகு வேறு பெண்களை அழைத்து கொண்டு, வீட்டுக்கு வந்துள்ளார் நிதீஷ்.. ஒரே கட்டிலில், அந்த பெண்ணுடன் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார்.. இதை விபன்சிகா தட்டிக்கேட்டதற்கு, “இஷ்டம் இருந்தால் இரு, இல்லாட்டி வெளியே போ” என்று நிதீஷ் சொல்லியிருக்கிறார். இந்த விஷயத்தை மாமனாரிடம் சொன்னதற்கு, “ஆம்பள என்றால் இப்படித்தான் இருப்பாங்க” என்று சொல்லி, மருமகளிடமும் பாலியல் அத்துமீறல் செய்துள்ளார்.. இதில், விபஞ்சிகா வெளியே போக முடியாத நிலையில், வீடியோ ஆதாரங்கள் மற்றும் கடிதம் ஒன்றையும் பதிவேற்றிய பிறகு தற்கொலை செய்துள்ளார்” என கூறினார்.
மாமனார் பாலியல் அத்துமீறல்:
விபஞ்சிகா தன்னுடைய கணவர் நிதிஷ் மீது எதிர்வினை தெரிவித்தபோது, நிதிஷ், “இது என் வீட்டுத் தீர்மானம்… என் அப்பாவுக்கும் சேர்த்துதான் உன்னை கல்யாணம் செய்தேன்… அவரையும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ” என்று கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், மாமனாரும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், விபஞ்சிகா அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து இருந்ததாகவும் தெரிகிறது.
தூக்கில் தொங்கிய உண்மை: வீடியோ ஆதாரம் அழிப்பு முயற்சி
விபஞ்சிகா தற்கொலைக்கு முன் வீடியோ ஆதாரங்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றியிருந்தார். பின்னர் நிதிஷ் தரப்பினர் அவற்றை நீக்கியதாக கூறப்படுகின்றது. இருப்பினும், விபஞ்சிகாவின் உறவினர்கள் அவற்றை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்திருக்கின்றனர்.
அதுல்யா கொடுமை : அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒத்த சம்பவம்
இதேபோல், கொல்லத்தைச் சேர்ந்த அதுல்யா என்ற பெண்ணும், அவரது கணவன் சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினரால் அடைத்து வைக்கப்பட்டு, போதையில் உடம்பில் முழுவதும் கடித்து சித்ரவதை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தன்னுடைய காயங்களை புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்துப் பதிவுசெய்து, உறவினர்களிடம் அனுப்பிய பிறகு, அதுல்யாவும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாநில விசாரணை வேண்டியது அவசியம் :
இந்த சம்பவம் துபாயில் நடந்தாலும், திருமணம் கேரளாவில் நடந்ததாலேயே, அந்த மாநில போலீசாரும் விசாரணை செய்ய வேண்டியது அவசியம் என மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் தெரிவித்துள்ளார். “விபஞ்சிகா வழக்கில் நியாயம் கிடைக்கவேண்டும். இது தமிழ்நாட்டை சேர்ந்ததல்ல என்றாலும், இந்தியாவுக்கே ஒரு பாடமாக இருக்க வேண்டிய உண்மை இது” எனக் கூறியுள்ளார்.
என்சிஆர்பி அதிர்ச்சி புள்ளிவிவரம்
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் கணவனால் கொலை செய்யப்பட்டு இறந்த மனைவிகள் எண்ணிக்கை 35,000 என தேசிய குற்ற பதிவுத்துறை (NCRB) வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை அதிகமாக இல்லாவிட்டாலும், பெண் கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருப்பது கவலைக்கிடமான விடயமாகும்.
சமூக விழிப்புணர்வு அவசியம்
இத்தகைய சம்பவங்கள், குடும்பத்தில் உள்ள பெண்கள் மீது நடக்கும் மனவுரும் உடலுரும் கொடுமைகளை வெளிக்கொணர்கின்றன. இந்த வழக்குகள், இந்திய சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையை பற்றி தீவிரமாக சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது.
விபஞ்சிகா மற்றும் அதுல்யா போன்ற பெண்களுக்கு நீதியைப் பெற்றுத்தருவதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற கொடுமைகள் நடைபெறாமல் இருக்க, சட்டரீதியான பாதுகாப்பு, சமூக விழிப்புணர்வு மற்றும் அரசு நடத்தும் நடவடிக்கைகள் மிகவும் அவசியமானவை.
