நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. அப்போது அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்து தொடர்பாக எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர். மேலும் சிவில் விமான போக்குவரத்து துறையில் காலியான பணிகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் கூறியதாவது நாட்டில் சிவில் விமான போக்குவரத்தை நெறிப்படுத்தி கண்காணிக்கும் மத்திய நிறுவனங்களாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனராகம், சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் உள்ளிட்ட பதவிகளில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் நிரப்பப்படாமல் மொத்தம் 4291 காலிப் பணியிடங்கள் உள்ளது.
இருப்பினும் இந்த காலிப் பணியிடங்கள் காரணமாக விமான போக்குவரத்து செயல்பாடுகளில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
