கர்நாடக மாநிலத்தில் உள்ள காவேரியை சேர்ந்த ஒரு சிறிய காய்கறி விற்பனையாளருக்கு ரூபாய் 29 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டது அப்பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது.

அந்த காய்கறி கடை விற்பனையாளர் சங்கர்கவுடா கடந்த 4 ஆண்டுகளாக நகராட்சி உயர்நிலைப்பள்ளி மைதானத்திற்கு அருகே சிறிய காய்கறி கடையை நடத்தி வருகிறார். அந்த கடையில் காய்கறி வாங்கும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் யுபிஐ அல்லது பிற டிஜிட்டல் வாலட்கள் மூலம் பணம் செலுத்தியுள்ளனர்.

அதனால் கடந்த 4 ஆண்டுகளில் ரூபாய் 1.63 கோடி பரிவர்த்தனைகள் நடந்ததாகவும், அதற்காக தற்போது ரூபாய் 29 லட்சம் ஜிஎஸ்டி பாக்கி இருப்பதாகவும் கூறி ஜிஎஸ்டி அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அதனால் அவர் மிகப்பெரிய சிக்கலில் மாட்டியுள்ளார்.

இது குறித்து காய்கறி கடை விற்பனையாளர் கூறியதாவது, “விவசாயிகளிடமிருந்து புதிய காய்கறிகளை வாங்கி ஒரு சிறிய கடை மூலம் விற்பனை செய்வதாக கூறியுள்ளார். மேலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்துச் செல்லாமல் வருவதால் யுபிஐ விரும்புகிறார்கள். இதனிடையே ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி அறிக்கையை சரியான முறையில் தாக்கல் செய்வதாகவும் அதற்கான பதிவேடு வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் ரூபாய் 29 லட்சம் வருமான வரி கோரிக்கை வைத்துள்ளனர் இவ்வளவு பெரிய தொகையை என்னால் எப்படி செலுத்த முடியும்? என சங்கர்கவுடா வருத்தம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரும் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.