திருவாரூர் மாவட்டம் ராமகே நகர் பகுதியில் முகமது சுல்தான் என்ற 45 வயது மதிக்கத்தக்க நபர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவரது வயலில் நேற்று முன்தினம் மதியம் 33 வயதுடைய இளம் பெண் ஒருவர் தனியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது முகமது சுல்தான் அங்கு சென்ற நிலையில் அந்த பெண்ணுக்கு ஜூஸ் வாங்கி கொடுத்துள்ளார்.

அதை குடித்த சிறிது நேரத்தில் இளம்பெண் மயங்கி விடவே அந்த பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த பெண்ணுக்கு மயக்கம் தெளிந்ததும் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து அறிந்து கொண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து முகமது சுல்தானை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.