ஒடிசாவில் உள்ள சாலையில் 15 வயது சிறுமி ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஜூலை 3-ம் தேதி நடைபெற்று உள்ளது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையில் நடந்து சென்ற சிறுமியை சர்தக் என்ற ஹாக்கி பயிற்சியாளர், சந்திப்பு மற்றும் சாகர் ஆகிய தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை கடத்திச் சென்று ஒரு விடுதியில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இந்த சிறுமி கடந்த 2 ஆண்டுகளாக ஹாக்கி மைதானத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் புகார் கொடுத்ததை அடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
