சென்னை சூழைமேடு வீரபாண்டியன் நகர் பகுதியில் வசித்து வந்த ஷர்மிலா (வயது 45) என்பவர், தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் வீட்டில் வசித்து வந்தார். கடந்த இரவு, வேலைக்குச் சென்றிருந்த அவரது மகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பதையடுத்து கவலையடைந்த ஷர்மிலா, வீட்டின் நான்காவது தளத்தில் உள்ள மொட்டை மாடிக்கு சென்று, போனில் மகனிடம் பேசியுள்ளார்.
இதே நேரத்தில், நேரம் இரவு 11.40 மணியளவில், மொட்டைமாடியில் நடந்தபடி பேசிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கால் தவறி, நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றாலும், வழியில் பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு கணத்தில் நடந்த இந்த துயரமான சம்பவம் அந்த பகுதியை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
