மதுரை மாவட்டத்தை சேர்ந்த பூபாலன் என்பவர் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை செந்தில்குமார் விருதுநகர் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தந்தையுடன் சேர்ந்து பூபாலன் அவரது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். பூபாலனுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் திருமணத்தின் போது பூபாலனின் பெற்றோர் பெண்ணின் வீட்டில் வரதட்சணையாக நகை, பணம் மற்றும் மாப்பிள்ளைக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.
இதனால் பூபாலன் அவரது மனைவியிடம் பணம், நகை அதிகமாக கேட்டு தொடர்ந்து அடித்து சித்திரவதை செய்து வந்துள்ளார். இதனால் அந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் அவர்கள் என் பெண்ணை அடித்து சித்திரவதை செய்துள்ளனர்.
மேலும் பூபாலன் என் மகளை சித்திரவதை செய்ததை அவர் சகோதரியிடம் கூறும் போது, காவலர்கள் எப்படி குற்றவாளிகளை சித்திரவதை செய்வார்களோ அதே போன்று நான் என் மனைவியே சித்திரவதை செய்தேன் என கூறியுள்ளார். இதனைதொடர்ந்து போலீசார் பூபாலன் மீது வரதட்சணை கொடுமை வழக்கின் கீழ் வழக்குபதிவு செய்தனர். இதனால் பூபாலன் தலைமறைவாகியுள்ளார்.
நேற்று தனிப்படை அமைக்கப்பட்டு பூபாலனை போலீசார் திருப்பூரில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் பூபாலன், அவரது தந்தை செந்தில்குமரன், அவரது தாய் விஜயா மற்றும் தங்கை அனிதா ஆகிய 4 பேர் மீதும் குற்றம் சாட்டியுள்ளனர். கைது செய்யப்பட்ட பூபாலனை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது பூபாலன் என்னிடம் சொல்வதற்கு நிறைய உள்ளது எனவும், அதற்கு ஆதாரங்கள் உள்ளது எனவும் கூறியுள்ளார். இந்த வழக்கினை விசாரித்த மதுரை மாவட்ட எஸ்.பி பூபாலன் மற்றும் அவரது தந்தை மீது சாட்டப்பட்ட குற்றத்தை தீவிர விசாரணை செய்து இருவரையும் பணிஇடை நீக்கம் செய்யுமாறு உத்தரவிட்டதின் பெயரில் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பூபாலனை வருகிற 25-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
