உலக சாம்பியன்ஷிப் லெஜென்ஸ்ட் போட்டியில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டியில் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாபிரிக்க ஆகிய 6 நாடுகள் கலந்து கொள்கிறது.
இந்த போட்டியின் போது நேற்று நடைபெற இருந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதாவது ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதால் இந்தியாவின் மூத்த வீரர்கள் பாகிஸ்தான் உடனான போட்டியில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்தனர்.
இதன் காரணமாக இந்தியா பாகிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது இது பற்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாஹித் அப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, விளையாட்டு அனைத்து தேசங்களையும் ஒன்று சேர்க்கும் நிலையில் அனைத்திலும் அரசியல் என்றால் எப்படி முன்னேற்றம் அடைய முடியும்.
முறையான உரையாடல் இல்லாத போது எப்படி தீர்வு காண முடியும். இதுபோன்ற நிகழ்வுகள் நாம் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடத்தான் நடைபெறுகிறது. ஆனால் எப்போதும் ஒரே ஒரு அழுகிய முட்டை அனைத்தையும் வீணாக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றார். மேலும் இவ்வாறு அவர் கூறினார்.
