இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி பின்தங்கி உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளும் ஜூலை 23ஆம் தேதி 4ஆவது போட்டியை விளையாட உள்ளனர். வருகிற தொடரில் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் சுழற் பந்துவீச்சாளர் பும்ரா விளையாடுவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவதாக கூறியுள்ள நிலையில், ஏற்கனவே 2 போட்டிகளில் விளையாடிவிட்டதால் மீதமுள்ள 2 போட்டிகளில் எதில் விளையாடுவார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
வரும் போட்டியில் பும்ரா விளையாட வேண்டும் என முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். வரும் போட்டியில் ஒரு வேலை பும்ரா களமிறங்கினால் 5 விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில் அவர் ஆசிய வரலாறு படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பும்ரா 49 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் தற்போது வரும் போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றும் பட்சத்தில் ஆசிய பௌலராக உள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமை தாண்டி முன்னிலை வகிப்பார் வரலாறு படைப்பார் என கூறி வருகின்றனர்.
