இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது காதலியான மாடல் மஹிகா ஷர்மா இருவரும் தங்களது பிசியான வேலைகளுக்கு நடுவே, ஒன்றாக இணைந்து நேரத்தைச் செலவழித்த  வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி  வருகிறது. மஹிகா ஷர்மா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வைரல் வீடியோவில், இந்த ஜோடி தங்களது உடல் சோர்வை நீக்குவதற்கான பிரத்யேக ரெக்கவரி பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, குளிர்ந்த நீர் நிரப்பப்பட்ட டப்பில் மஹிகா அமர்ந்திருக்க, அவரது காதலனான ஹர்திக் பாண்டியா மிகவும் குறும்புத்தனமாக பக்கெட் பக்கெட்டாக ஐஸ் கட்டிகளை எடுத்து அந்த டப்பில் ஊற்றுகிறார். இவர்களின் செல்லப் பிராணியான நாய் பின்னணியில் நின்று இந்த வேடிக்கையான காட்சியைப் பார்ப்பது வீடியோவின் அழகைக் கூட்டுவதோடு, இவர்களின் க்யூட் கெமிஸ்ட்ரியைப் பார்த்து நெட்டிசன்கள் லைக்குகளைக் குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Rohit Saraiya (@rohitsaraiya.official)

ஹர்திக் – மஹிகாவின் இந்த அ காதல் தருணத்தைத் தாண்டி, இந்த வீடியோ விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் மத்தியில் புகழ்பெற்ற ‘ஐஸ் பாத் தெரபி’ (Ice Bath Therapy) குறித்த ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. கடுமையான உடற்பயிற்சி அல்லது வேலைகளுக்குப் பிறகு, உடலைச் சிறிது நேரம் குளிர்ந்த நீரில் நனைத்து வைக்கும் இந்தச் சிகிச்சை முறை, தசைகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை உடனடியாகக் குறைக்க உதவுகிறது. உடல் மீண்டும் பழைய வெப்பநிலைக்குத் திரும்பும்போது ரத்த ஓட்டம் சீராகி, தசைப்பிடிப்புகள் நீங்கி உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. தொழில்முறை விளையாட்டு வீரர்கள் தங்களது உடல் சோர்வை நொடியில் போக்க உலகளவில் இந்த ஐஸ் குளியல் முறையைப் பயன்படுத்துவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.