2026 டி20 உலகக்கோப்பை தொடரில் கொழும்பில் நடந்த போட்டியில் இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்த நிலையில், இந்திய அணிக்கு சாதகமாக அம்பயர்கள் செயல்படுவதாகப் பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் குஷ்தில் ஷா ஏ ஆர் ஒய் பாட்காஸ்ட்டில் பேசியுள்ள விஷயம் கிரிக்கெட் உலகையே அதிரவைத்துள்ளது.

2025 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி எனத் தொடர்ந்து கடந்த 6 போட்டிகளாக இந்தியாவிடம் பாகிஸ்தான் மண்ணைக் கவ்வி வரும் நிலையில், “இந்திய அணி விளையாடும்போது அம்பயரிங் முடிவுகள், டிரஸ்ஸிங் ரூம் முடிவுகள், ஏன் போட்டிகள் நடக்கும் இடம் வரை எல்லாமே அவர்களுக்குச் சாதகமாகத்தான் நடக்கிறது” என குஷ்தில் ஷா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

75 சதவீத இந்திய ரசிகர்கள் முன்னிலையில் இத்தனை சவால்களையும் தாண்டி பாகிஸ்தான் ஜெயிப்பதுதான் தங்களுக்குப் பெருமகிழ்ச்சி என்றும், இதற்கெல்லாம் பின்னணியில் அரசியல் நகர்வுகள் இருப்பதாகவும் அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.