ஈரோடு மாவட்டத்தில் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடை விதித்து மருத்துவ நலப் பணிகள் இயக்குனர் உத்தரவு அளித்துள்ளார். மேலும் அந்த மருத்துவமனையில் உயிர்வாக்கும் டயாலிசிஸ் சிகிச்சை மட்டும் அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அனுமதி புதுப்பித்தல் சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கிட்னி திருட்டு நடப்பதாக வந்தது. இந்த தகவலை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
