மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வரான ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேவை மறைமுகமாக பச்சோந்தி என்று விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது பாஜக மற்றும் சிவசேனா மெஜாரிட்டியை தக்க வைத்துக் கொள்ள உத்தவ் தாக்கரேவுக்கு 40 முதல் 50 முறை பட்நாவிஸ் அழைப்பு விடுத்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. பச்சோந்தி போன்று மிகவும் விரைவாக கலரை மாற்றிக் கொள்ளும் நபரை நான் பார்த்ததில்லை.
அவர் யாரைக் குறைவாக நினைத்தாரோ அவர்களுடன் சென்று விட்டார். பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்ததை சுட்டிக்காட்டினார். கடந்த 2017 இல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சிவசேனா 84 இடங்களில், பாஜக 82 இடங்களில் வெற்றி பெற்றது. என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பட்நாவிஸ் மும்பை மேயர் பதவியை தர ஒப்புக்கொண்டார். கடந்த 2019 கூட்டணியில் இருந்து வெளியேறி பட்நாவிஸ்க்கு துரோகம் செய்தார் என்று தெரிவித்துள்ளார்.
