சென்னை நுங்கம்பாக்கம் வேலஸ் கார்டன் சாலையில் வெங்கடாசலம் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே தலைமை பொறியாளர் ஆவார். வீட்டில் ஒரு கோடி மதிப்பிலான தங்க வளையல்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை சமீபத்தில் மர்மநபர்களால் திருடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் வெங்கடாசலம் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் அவருடைய வீட்டில் பீரோவில் இருந்த பணத்தை வெளி நபர்கள் திருடி சென்றதற்கான எந்த ஒரு அடையாளங்களும் இல்லை. அதனால் வீட்டில் உள்ள நபர்கள் மற்றும் வீட்டிற்கு வந்த நபர்கள் பணத்தை திருடி இருக்கலாம் என்று காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் வீட்டிற்கு சமீபத்தில் வந்து சென்றவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பீரோவில் உள்ள கைரேகைகளை வைத்தும் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.