நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளியேறி உள்ளதாகவும், இன்று ஊட்டி அருகே உள்ள எடக்காடு பகுதிக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்குள்ள சாலையில் சிறிது நேரம் நடமாடிய சிறுத்தை சாலை ஓரங்களில் போடப்பட்டுள்ள பாலத்தின் மீது ஏறி ஒய்யாரமாக நடந்து சென்றுள்ளது.
மேலும் அங்குள்ள பகுதிகளில் இறைத்தேடி நோட்டமிட்டு வருகிறது. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் சிலர் அப்பகுதியை கடந்து பாலத்தில் நடந்து சென்ற சிறுத்தையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதனால் நீலகிரி எடக்காடு பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மிகுந்த பயத்தில் இதுவரை சிறுத்தை பொதுமக்களை அச்சுறுத்தவில்லை.
இருப்பினும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விழிப்புடன் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காடுகளுக்கு அருகே உள்ள சாலைகள் வழியாக விலங்குகள் பயணிக்க வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் யாரும் அதனை புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவும் முயற்சிக்க வேண்டாம்.
பாதுகாப்பாக வண்டியை ஓட்டி செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலும், அல்லது அவசர உதவிகளுக்கோ வனத்துறையினரின் எண்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் எனவும், இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் பயணம் மேற்கொள்வோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
