இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஸ்டண்ட் சில்வா என்பவர் சூர்யா குறித்த சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதாவது கடந்த 10 ஆண்டுகளாக நடிகர் சூர்யா சார் அவர்கள் ஸ்டண்ட் நடிகர்களுக்கு இன்ஷூரன்ஸ் பணம் வேண்டும் என்று அடம் பிடித்து சப்போர்ட் பண்ணுவதில் முதலிடத்தில் உள்ளார். இது மட்டுமின்றி அகரம் பவுண்டேஷன் மூலம் நிறைய கஷ்டப்படும் பிள்ளைகளுக்கு படிப்பு அளிக்கிறார். படிப்பு எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும்.

நான் அவரை முதன் முதலில் வியந்து பார்த்தது எப்போது என்றால் எங்களுக்கு இன்சூரன்ஸ் பணம் கட்டி கொடுத்தது தான். அதன் பின் அது பழக்கமாகி எல்லா டைரக்டர்களும், ப்ரொடியூசர்களும் இன்சூரன்ஸ் கட்டிக் கொடுக்க ஆரம்பித்தனர் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.