தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஜிவி பிரகாஷ். இவர் பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதன்படி நிறைய ஹிட் பாடல்களையும் கொடுத்துள்ளார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஜிவி பிரகாஷின் 25வது படமான கிங்ஸ்டன் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதை அடுத்து பிளாக் மெயில் என்ற படத்திலும் அவர் நடித்துள்ளார்.
Here is #Blackmail trailer for u all … best of luck my brother @gvprakash https://t.co/vR2f47RNit
— Dhanush (@dhanushkraja) July 19, 2025
இப்படத்தை இயக்குனர் மு.மாறன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஹீரோயினாக தேஜூ அஸ்வினி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஷாம் சி எஸ் இசையமைத்துள்ளார. இப்படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்நிலையில் பிளாக்மெயில் திரைப்படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
