நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் இயக்குநர் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் மற்றும் பாடகர் தெருக்குரல் அறிவு உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் கலந்துகொண்டு தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொன்னது என்ன?
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராப் பாடகர் தெருக்குரல் அறிவு, முன்பு சாதியால் மறுக்கப்பட்ட கல்வி, இன்று நுழைவுத்தேர்வுகள் மூலம் தட்டிப்பறிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், கடந்த முறை தலைமைச் செயலகம் முன்பு நீட்டுக்கு எதிராகப் போராடியபோது கைது செய்யப்பட்டு, பின்னர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைச் சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது அமைச்சர் , தன்னிடம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தால் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். அப்படி இருக்கையில், நீங்கள் ஏன் தேவையில்லாமல் இந்தப் போராட்டத்தில் இறங்கினீர்கள்?” என்று தமக்கு அறிவுரை கூறி அனுப்பியதாக அறிவு மேடையில் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
போராடும் மாணவர்களின் நியாயமான குரலுக்குச் செவிமடுக்காமல் இதுபோன்ற பதில்கள் வருவதை அவர் கடுமையாக விமர்சித்தார்.
போராட்டத்தில் குவியும் திரைப்பிரபலங்கள்:
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி மற்றும் தமிழகத்தில் மாணவர் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி கலைஞர்கள் நேரடியாகக் களமிறங்கி வருவது அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
“>
மாணவர்களின் போராட்டத்திற்குத் திரைத்துறையின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
