தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இவர் வில்லனாக நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி திரைப்படங்களாக இவருக்கு அமைந்தது. இந்நிலையில் எஸ்.ஜே. சூர்யா மீண்டும் இயக்குனராக களமிறங்கியுள்ளார்.

அவர் இயக்க உள்ள படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கிறது. மேலும் இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளார்.

நடிகர் எஸ்.ஜே. சூர்யா உடன் கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். படத்தில் நடிக்க உள்ள பிற நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் காட்சிகள் இந்தியா மற்றும் மெக்சிகோ பகுதிகளில் எடுக்க உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. எஸ்.ஜே. சூர்யா தற்போது நடித்துக் கொண்டிருந்த சர்தார் 2, LIK படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் இவரது பிறந்த நாளை ஒட்டி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு “கில்லர்” என தலைப்பு வைத்துள்ளனர். மேலும் இப்படம் குறித்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எஸ்.ஜே. சூர்யா தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.