தமிழ் சினிமாவில் பிரபலமான சீரியல் நடிகராக இருப்பவர் சஞ்சீவ். இவர் படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவரது மனைவி பிரீத்தி. இவரும் சீரியல் நடிகை தான். இந்நிலையில் சஞ்சீவ் அவரது மனைவி இருவரும் ஒரே சமையல் நிகழ்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர். அப்போது அவரிடம் விஜய் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் நானும் என் நண்பர்களும் அடிக்கடி விஜய் வீட்டிற்கு ஒன்றாக செல்வோம். அங்கு விஜயின் மனைவி சங்கீதா எங்கள் அனைவருக்கும் சமைத்துக் கொடுப்பார். நாங்கள் சிரித்துக் கொண்டே பேசியபடி மகிழ்ச்சியாக அதனை சாப்பிடுவோம். நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக கூறுவது பொய்.

நடிகர் விஜய் தன்னுடைய குடும்பத்தை வெளியுலவிற்கு பெரிதாக காட்டிக் கொள்ள விரும்பவில்லை என்று கூறினார். இதன் மூலம் நடிகர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதாவது நடிகர் விஜய் மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு தன்னுடைய மனைவி சங்கீதாவை எந்த நிகழ்ச்சிகளுக்கும் அழைத்து வரவில்லை. அதே நேரத்தில் நடிகை திரிஷாவுடன் அவர் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் விஜயின் விவாகரத்து சர்ச்சைகள் பரவலாக பேசப்படவில்லை தற்போது நடிகர் சஞ்சீவ் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதில் வழங்கியுள்ளார்.