தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி வருகிற ஜூலை 24ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் செயல்படாது. இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக ஆகஸ்ட் 9-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஜூலை 28ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிரசித்தி பெற்ற மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோவிலில் ஆடிப்பூரம் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்காக ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இதன் காரணமாக அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக ஆகஸ்ட் 9-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதேபோன்று ஜூலை 23ஆம் தேதி அரியலூர் மாவட்டத்திற்கு ஆடி திருவாதிரை நிகழ்ச்சியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்றவைகள் செயல்படாது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக ஜூலை 26 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
