தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் வேக திசை மாறுபாடு போன்றவர்களால் தமிழ்நாட்டின் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு தேனி, கன்னியாகுமரி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.
இதைத்தொடர்ந்து ஜூலை 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
